Searching...
Saturday, June 15, 2013

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்........

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்......


*அருகம்புல் பொடி (பவுடர்) :- அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய்
பொடி (பவுடர்) :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது 


*
கடுக்காய் பொடி (பவுடர்) :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*
வில்வம் பொடி (பவுடர்) :- அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக்கொதிப்பிற்குச் சிறந்தது 

*
அமுக்கலா பொடி (பவுடர்) :- தாது புஷ்டி, ஆண்மைக் குறைபாடுக்குச் சிறந்தது. 

*
சிறுகுறிஞான் பொடி (பவுடர்) :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். 

*
நவா  பொடி (பவுடர்) :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்குச் சிறந்தது. 

*
வல்லாரை பொடி (பவுடர்) :- நினைவாற்றலுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் சிறந்தது. 

*
தூதுவளை பொடி (பவுடர்) :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்குச்சிறந்தது. 

*
துளசி பொடி (பவுடர்) :- மூக்கடைப்பு, சுவாசக் கோளாறுக்குச் சிறந்தது. 

*
ஆவரம்பூ பொடி (பவுடர்) :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். 

*
கண்டங்கத்திரி பொடி (பவுடர்) :- மார்புச் சளி, இரைப்பு நோய்க்குச் சிறந்தது. 

*
ரோஜாப்பூ பொடி (பவுடர்) :- இரத்தக் கொதிப்புக்குச் சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். 

*
ஓரிதழ் தாமரை பொடி (பவுடர்) :- ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா 

*
ஜாதிக்காய் பொடி (பவுடர்) :- நரம்புத் தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*
திப்பிலிப் பொடி (பவுடர்) :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்குச் சிறந்தது. 

*
வெந்தயப் பொடி (பவுடர்) :- வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆறும். சர்க்கரை நோய்க்குச் சிறந்தது. 

*
நிலவாகைப் பொடி (பவுடர்) :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். 

*
நாயுருவிப் பொடி (பவுடர்) :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. 

*
கறிவேப்பிலைப் பொடி (பவுடர்) :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. 

*
வேப்பிலைப் பொடி (பவுடர்) :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்குச்சிறந்தது. 

*
திரிபலா பொடி (பவுடர்) :- வயிற்றுப் புண் ஆற்றும், அல்சரைக் கட்டுப்படுத்தும். 

*
அதிமதுரம் பொடி (பவுடர்) :- தொண்டைக் கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். 

*
துத்தி இலை பொடி (பவுடர்) :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்குச்சிறந்தது. 

*
செம்பருத்திப்பூ பொடி (பவுடர்) :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. 

*
கரிசலாங்கண்ணிப் பொடி (பவுடர்) :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்தது. 

*
சிறியாநங்கை பொடி (பவுடர்) :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. 

*
கீழாநெல்லிப் பொடி (பவுடர்) :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்குச்சிறந்தது. 

*
முடக்கத்தான் பொடி (பவுடர்) :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாதத்துக்கு நல்லது. 

*
கோரைக்கிழங்கு பொடி (பவுடர்) :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சருமப்பாதுகாப்பிற்கு சிறந்தது. 

*
குப்பைமேனி பொடி (பவுடர்) :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்குச் சிறந்தது. 

*
பொன்னாங்கண்ணி பொடி (பவுடர்) :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. 

*
முருஙகைவிதை பொடி (பவுடர்) :- ஆண்மை சக்தி கூடும். 

*
லவங்கப்பட்டை பொடி (பவுடர்) :- கொழுப்புச் சத்தைக் குறைக்கும். மூட்டுவலிக்குச் சிறந்தது. 

*
வாதநாராயணன் பொடி (பவுடர்) :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். 

*
பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 

*
வாழைத்தண்டு பொடி (பவுடர்) :- சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. 

*
மணத்தக்காளி பொடி (பவுடர்) :- குடல் புண், வாய்ப் புண், தொண்டைப் புண் நீங்கும். 

*
சித்தரத்தை பொடி (பவுடர்) :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. 

*
பொடுதலை பொடி (பவுடர்) :- பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும். 

*
சுக்கு பொடி (பவுடர்) :- ஜீரணக் கோளாறுகளுக்குச் சிறந்தது. 

*
ஆடாதொடை பொடி (பவுடர்) :- சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவிற்குச் சிறந்தது. 

*
கருஞ்சீரகப்பொடி (பவுடர்) :- சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். 

*
வெட்டி வேர் பொடி (பவுடர்) :- நீரில் கலந்து குடித்துவரச் சூடு குறையும், முகம் பொலிவு பெறும். 

*
வெள்ளருக்கு பொடி (பவுடர்) :- இரத்த சுத்தி, வெள்ளைபடுதல், அடிவயிறு வலி நீங்கும். 

*
நன்னாரி பொடி (பவுடர்) :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெருக்கி, நா வறட்சிக்குச் சிறந்தது. 

*
நெருஞ்சில் பொடி (பவுடர்) :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். 

*
பிரசவ சாமான் பொடி (பவுடர்) :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பைச் சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்குச்சிறந்தது. 

*
கஸ்தூரி மஞ்சள் பொடி (பவுடர்) :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். 

*
பூலாங்கிழங்கு பொடி (பவுடர்) :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். 

*
வசம்பு பொடி (பவுடர்) :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். 

*
சோற்று கற்றாலை பொடி (பவுடர்) :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். 

*
மருதாணி பொடி (பவுடர்) :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். 

*
கருவேலம்பட்டை பொடி (பவுடர்) :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

 நன்றி: http://www.eegarai.net/t93252-topic


0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!