Searching...
Sunday, May 19, 2013

மே 31: பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்


இந்த மாத இறுதியில் பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்லினால் பாதிப்பில்லை என தகவல்

பதிவு செய்த நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே 19, 11:14 AM IST

இந்த மாத இறுதியில் பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்லினால் பாதிப்பில்லை என தகவல்

வாஷிங்டன், மே 19: இந்த மாத இறுதியில் பூமியை நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஏராளமான எரிகற்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், ராட்சத பாறை போன்ற எரிகல் ஒன்று பூமியை நோக்கி நெருங்கி வருகிறது. இது 1.7 மைல் நீளம் கொண்டது. இதை கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்சில் உள்ள வின்கோல்ன் தொழில் நுட்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நியூ மெக்சிகோவில் சொகோர்ரோ என்ற இடத்தில் எரிகல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இது கண்டறியப்பட்டது. இந்த ராட்சத எரிகல் வருகிற 31-ந்தேதி இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கல் பூமியை தாக்காது. 40 லட்சம் மைல் தொலைவில் இருப்பதால் விலகி சென்றுவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த எரிகல் பூமியை நெருங்குவதை ரேடார் மூலம் கண்காணிக்க போவதாகவும் கூறியுள்ளனர். இந்த ராட்சத எரிகல்லுக்கு குவின் எலிசபெத்-2 என பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு இது போன்று ஒரு எரிகல்லை கண்டு பிடித்தனர். அதற்கு குவின் எலிசபெத் என பெயர் வைத்திருந்தனர்.

Courtesy_

Also read the related stories

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களையும் 28-ம் தேதி ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

பதிவு செய்த நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே 19, 6:05 PM IST

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களையும் 28-ம் தேதி ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

வாஷிங்டன், மே 19: புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம்.

பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும்.

வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும்.

பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.

புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 660 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. வியாழன் இருந்து வெள்ளி 744 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் காணும் அபூர்வ வாய்ப்பு வரும் 28-ம் தேதி நமக்கு கிடைக்கவுள்ளது.

Courtesy_

Also read the related stories

Asteroid Named QE2 Heading Near Earth On May 31

May 17, 2013 By Paul SheaQE2 1998, an asteroid big enough to wipe out life on earth, will pass the planet on Friday May 31.

QE2 1998, an asteroid big enough to wipe out life on earth, will pass the planet on Friday May 31.

A behemoth is headed toward earth on May 31, 2013.  An asteroid named 1998 QE2, is due to fly by the earth at the end of this month, providing a spectacle for amateur astronomers, though scientists seem certain that the space debris will not crash into the earth on its journey through space.

behemoth asteroid
1998 QE2 Asteroid Discovery

1998 QE2 was discovered fifteen years ago, though scientists are unsure where the particle actually came from, according to an LA Times piece. It is about 1.7 miles across, and in the extremely unlikely event that it does collide with the earth, it would almost certainly cause a mass extinction on the surface of the planet.

According to some speculation from Amy Mainzer who works at Jet Propulsion Laboratory in La Cañada Flintridge, the asteroid's distinctive blackened sooty surface could indicate that it used to be a comet, and has since gotten too close to the sun's aura. It may also be an asteroid that was freed from the asteroid belt between Jupiter and Mars.

The asteroid is predicted to come within about 3.6 million miles of the surface of the planet, at its closest encounter. The International Space Station, in contrast, hits its highest point at around 250 miles above the surface of the planet. There is little to worry about from QE2, it would seem.

This will be the last time that the asteroid will come close to earth for more than a century. The next time the asteroid is predicted to show up is in 2119, long after most of the planet's current inhabitants have gone further than the asteroid ever will. Orbiting the sun, the object will end up across the solar system several times before it ends up close to out planet again.

Objects like the 1998 QE2 Asteroid are potentially hazardous to life on earth, though certainly not this time around for May 31′s visitor. Their orbit can be changed slightly by minor gravitational pulls and collisions with other objects in space, meaning that it is difficult to rule out a collision at encounter far from their predicted date.

QE2 will not be visible with the naked eye on May 31, and astronomers will be studying it with powerful telescopes utilizing radar technology.

Courtesy_

0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!