Searching...
Thursday, January 17, 2013

Pondicherry Airport resumes services

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுவையில் இருந்து விமான சேவை: பெங்களூரில் இருந்து வந்த பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்றார் 

Pondichery வியாழக்கிழமை, ஜனவரி 17, 3:33 PM IST

புதுச்சேரி, ஜன. 17: கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை புதுவையில் இருந்து பயணிகள் விமான சேவை நடந்து வந்தது. புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு விமானம் சென்றது. 

ஆனால் நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறையவே விமானம் சேவை படிப்படியாக குறைந்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் லாஸ்பேட்டை விமான தளம் ஒரு தனியார் விமான பயிற்சி பள்ளி விமானத்திற்கே உதவி வந்தது. அதுமட்டுமல்லாமல் டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்து செல்ல மட்டுமே விமான தளம் பயன்பட்டும் வந்தது. 

விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர். இருப்பினும் கடந்த ஆட்சியில் இதற்கான பணிகள் ஜரூராக நடந்தது. தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெற்று விமான நிலையத்தின் ரன்வே தூரம் கூடுதலாக நீடிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு துரிதப்படுத்தினார். 

மேலும், தனியார் விமான நிறுவனங்களை புதுவையில் இருந்து விமான சேவையை தொடங்க அழைப்பு விடுத்தார். இதில் தனியார் விமான நிறுவனம் புதுவையில் இருந்து விமான சேவையை தொடங்க முன்வந்தது. 

இதனையடுத்து புதுவை அரசுடன் அந்த விமான நிறுவனம் ஒப்பந்தமும் ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின்படி இன்று (வியாழக்கிழமை) முதல் விமான சேவை மீண்டும் புதுவையில் தொடங்கியது. 

முதல் விமானம் இன்று மதியம் 12.20 மணிக்கு பெங்களூரில் இருந்து புதுவைக்கு புறப்பட்டது. மதியம் 1.10 மணியளவில் பெங்களூர் விமானம் புதுவை வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் 35 பயணிகள் புதுவைக்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வரவேற்றனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், அசோக் ஆனந்து, தமிழ்செல்வன், கார்த்திகேயன், தலைமை செயலாளர் சத்தியவதி, அரசு செயலாளர் ராகேஷ் சந்திரா, விமான நிலைய ஆணைய அதிகாரி ரவிக்குமார், சுற்றுலாத்துறை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து இந்த விமானம் மீண்டும் மதியம் 1.30 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டது. இது, மதியம் 2.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். இதில் 35 பயணிகள் பயணித்தனர். அவர்களையும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழியனுப்பி வைத்தனர். 

பெங்களூர் செல்லும் இந்த விமானம் 78 இருக்கைகள் கொண்டது. இந்த விமானம் வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும். விமான நிலையத்தில் ஐ.ஆர்.பி. இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையில் 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விமான சேவை மட்டுமே இன்று தொடங்கி உள்ளது. விமான நிலைய திறப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும்.

Courtesy_


Also read the related stories

Pondy airport resumes commercial flights

Puducherry | Thursday, Jan 17 2013 IST

-- (UNI) --

After a gap of 20 years,commercial air services to Puducherry resumed today with the arrival of a Spice Jet aircraft carrying 35 passangers from Bangaluru. The flight which took off at 1210 hrs in Bangaluru, arrived here at 1310 hrs. It left for Bangaluru at 1330 hrs. 

Puducherry Chief Minister N Rangasamy,his cabinet colleagues and Deputy Speaker Selvam, among others, greeted the passangers giving them flowers. They also gave a send off to 35 passangers to Bangaluru. 

The Puducherry airport was operating commercial flights from 1988 to 1992. Thereafter, it was used for landing charted flights and training before resuming commercial operations again today. 

Courtesy_

0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!